ஸ்தாபகர் தினமும் வாணிவிழாவும் – 2015

எமது கல்லுாரியின் ஸ்தாபகர் தினமும் வாணிவிழாவும் 21.10.2015 ம்திகதிமு.ப 9.00 மணிக்கு கல்லுாரியின் பிரதிஅதிபர் திரு.பொ.சந்திரகுலசிங்கம் தலைமையில் கல்லுாரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வடமாகாண கல்வித் திணைக்களமும் Yarl IT Hub ம் இணைந்து நடாத்திய தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி-2015 இல் எமது கல்லுாரி அணி வலய மட்டத்தில் 1வது இடத்தைப் பெற்றுவெற்றியீட்டியுள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களமும் Yarl IT Hub ம் இணைந்து நடாத்திய தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி-2015 இல் எமது கல்லுாரி அணி வலய மட்டத்தில் 1வது இடத்தைப் பெற்றுவெற்றியீட்டியுள்ளது. வெற்றியீட்டிய மாணவர்களையும் பொறுப்பாசிரியரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் வருடாந்த ஒன்று கூடல் – 2015

 

எமது கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் வருடாந்த ஒன்று  கூடல்  23.08.2015  அன்று காலை 10 மணிமுதல் இரவு 07 மணி வரை  Nealson park,  Scarborough என்னும் இடத்தில்  நடைபெற்றது.

தேசிய மட்ட போட்டியில் தங்கம் வென்றார் செல்வி சுமித்தா!

தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் செல்வி  சுமித்தா பிரிவு 5 குறு நாடக பிரதியாக்கத்தில் முதலாம் இடத்தினைப்  பெற்று தங்கப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார் என்பதனைபெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் காணி கொள்வனவுத்திட்டம்

land1

பிரான்ஸ் வீரசிஙம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காணி கொள்வனவுத்திட்டத்தின் முதலாவது கட்டமான கல்லூரியின் வடக்குப்புறமாக உள்ள கா. பூபாலபிள்ளை அவர்களின் 10 iஇலட்சம்  ரூபா பெறுமதியான 2 பரப்பு காணி 17.08.2015 அன்று கொள்வனவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2015

3

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் பழையமாணவர் சங்கஆண்டுப் பொதுக் கூட்டம் மற்றும் இராப்போசன விருந்தும்  31.07.2015 (வெள்ளிக்கிழமை) பி ப 04.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிக்ச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் வழமைக்கு மாறாக பெருமள்விலான உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அத்துடன் புதிய செயற்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

பிரான்ஸ் வாழ் கல்லூரி பழைய மாணவர்களின் 2வது கலந்துரையாடல் 03.05.2015

fr8

பிரான்ஸ் வாழ் கல்லூரி பழைய மாணவர்களின் 2வது கலந்துரையாடல் 03.05.2015 (ஞாயிற்றுக்கிழமை) 16.00 மணிக்கு லக்சுமி உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்லூரிக்கு பக்கமாகவுள்ள 15 இலட்சம் பெறுமதியான 3 பரப்புக்காணி இம்மாத இறுதிக்குள் கொள்வனவு செய்வதென முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கா.பொ.த சாதாரண பரீட்சையில் இருவர் 9A சித்தி பெற்றுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையி T. பசுபதன்,லக்சிகா.T ஆகிய இருவரும் 9A சித்தி  பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு கல்லூரியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

பிரான்ஸ் பழைய மாணவர்களின் காணி கொள்வனவுத்திட்ட நிதி கையளிக்கும் நிகழ்வு

எமது கல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர்களின் காணி கொள்வனவுத்திட்டத்தின் முதலாவது பகுதி நிதி ரூபா 5 லட்சம்  கையளிக்கும் நிகழ்வு 11.03 2015 காலை 08.00 மணிக்கு கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது!

பிரான்ஸ் வாழ் கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்று கூடல்!

13

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூயின் பிரான்ஸ் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வானது இன்று 22.02.2015 பி.ப 1700 மணியளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இது பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் வைபவமாகவும் புதிய நிர்வாக அங்கத்தவர்களை தெரிவு செய்யும் நிகழ்வாகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்தி , இணைபாடவிதான செயற்பாடுகள் பற்றியும் கல்லூரிக்கான தேவைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டன. அத்துடன் தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.